கொரோனா எச்சரிக்கையை மீறி கூட்டத்தை கூட்டி திருமணம் செய்து கொண்ட தம்பதி! பின்னர் நடந்த விபரீதம்

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் கொரோனா கட்டுப்பட்டை மீறி திருமணம் செய்த நபரின் குடும்பத்தாருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானின் பில்வாரா நகரில், 50 விருந்தினர்களுடன் மகனின் திருமணத்தை நடத்திக் கொள்ள கீசுலால் ரதி என்பவருக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.

ஆனால், திருமணத்தில் 250 க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். அவர்களில் 15 பேருக்கு தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதுடன், கொரொனாவால் மணமகனின் தாத்தாவும் உயிரிழந்தார்.

மேலும் 58 பேர் நோய்தடுப்பு தனிமைக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

திருமண குடும்பத்தாரின் அலட்சியம் காரணமாக, தனிமை வார்டு அமைத்தல்,சோதனை, உணவு என அரசுக்கு ஏற்பட்ட செலவுகள் கணக்கிடப்பட்டு 6,26,600 அபராதம் விதிக்கப்பட்டு, அதை 3 நாட்களுக்குள் செலுத்துமாறு கெடு விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்