நெஞ்சு வலிப்பதாக அழுத சிறுவன்! X-rayவை பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்.. வெளியான புகைப்படம்

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் சிறுவன் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறிய நிலையில் அவனுக்கு எடுக்கப்பட்ட X-ray-வில் நுரையீரல் மற்றும் சுவாசக்குழாய் இடையே LED பல்ப் இருந்ததை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த சிறுவன் வீட்டில் பொம்மையை வைத்து விளையாடி கொண்டிருந்தான்.

அப்போது திடீரென தொடர்ந்து சிறுவனுக்கு கடுமையான இருமல் ஏற்பட்டது. இதையடுத்து பெற்றோர் இருமலுக்கு மருந்து கொடுத்தும் அது நிற்காமல் இருந்தது.

பின்னர் தனது நெஞ்சு வலிப்பதாக சிறுவன் அழுதபடி கூறியதையடுத்து பதறிய குடும்பத்தார் மருத்துவமனைக்கு அவனை அழைத்து சென்றனர். அங்கு சிறுவன் தொடர்ந்து இருமியபடியே இருந்த நிலையில் மருத்துவர்கள் ஒன்றும் புரியாமல் திகைத்தனர்.

இதன்பின்னர் மருத்துவ குழுவினர் சிறுவன் நெஞ்சு பகுதியை X-ray எடுத்து பார்த்த போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அதில் சிறுவனின் சுவாசக்குழாய் மற்றும் நுரையீரலுக்கு இடையே ஏதோ ஒரு பொருள் சிக்கியிருப்பது தெரிந்தது.

இது போன்ற சூழலில் மருத்துவர்கள் ஆப்ரேஷன் செய்வார்கள், ஆனால் சிறுவனின் வயதை கருத்தில் கொண்டு அவனை மயக்கமடைய செய்து வாய்க்குள் ஒரு சாதனத்தை வைத்து, உள்ளே சிக்கியிருந்த பொருளை வெளியே எடுத்தார்.

அப்போது தான் அது பொம்மையில் இருக்கு LED பல்ப் என தெரிந்தது.

சிறுவன் பொம்மையை வைத்து விளையாடும் போது தெரியாமல் அதை விழுங்கியதும், அந்த விடயம் குறித்து தானே அறியாமல் இருந்ததும் தெரியவந்தது.

தற்போது அந்த சிறுவன் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்