துருப்புகளை திரும்ப பெறும் முனைப்பில் டிரம்ப்? தொடர் தாக்குதலில் கொல்லப்பட்ட அமெரிக்கர்கள்!

Report Print Abisha in தெற்காசியா

ஆப்கானிஸ்தானின் Nangarhar மாகணத்தில் நடந்த தாக்குதலில் அமெரிக்க துருப்புகள் பலர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானை தாலிபானிடம் இருந்து மீட்க அமெரிக்க துருப்புகளை அனுப்பி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில், Nangarhar மாகணத்தில் நடந்த தாக்குதலில் அமெரிக்க துருப்புகள் பலர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் படுகாயம் அடைந்தனர். எந்தனைபேர் கொல்லப்பட்டனர் என்றும், படுகாயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை குறித்தும் சரிவர வெளியிடப்படவில்லை.

இராணுவ செய்தி தொடர்பார் Col. Sonny Leggett அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்த தாக்குதல் நேரடியாக நடந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நிலைமையை கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த ஆண்டு 20 அமெரிக்க துருப்புகள் கொல்லப்பட்டனர். அதன்பின் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தாலிபான்களுடனான பேச்சுவார்த்தை நிறுத்தி வைத்தார்.

தற்பேதும் ஆப்கானிஸ்தானில் உள்ள 4000 அமெரிக்க துருப்புகளை திரும்ப பெற டிரம்ப் முனைப்பு காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்