60 வயது பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்த 22 வயது இளைஞருக்கு நேர்ந்த கதி

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் 60 வயது பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்த 22 வயது இளைஞர் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலத்தின் ஆக்ராவை சேர்ந்த 60 வயது பெண்ணுக்கு திருமணமாகி 7 பிள்ளைகள் மற்றும் பேர பிள்ளைகளும் உள்ளனர்.

இந்நிலையில் அவருக்கும் 22 வயது இளைஞர் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டது.

இந்த காதலுக்கு பெண்ணின் குடும்பத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர், இதையடுத்து அவர்கள் வசிக்கும் பகுதிக்கு வந்த இளைஞர் அனைவருக்கும் தொந்தரவு கொடுக்கும் வகையில் சத்தம் போட்டு சண்டை போட்டார்.

இதையடுத்து இந்த விடயம் காவல் நிலையத்துக்கு போனது.

அங்கு பொலிசார் எவ்வளவோ எடுத்து கூறியும் இளைஞரை திருமணம் செய்தே தீருவேன் என்பதில் 60 வயது பெண் உறுதியாக இருந்தார்.

ஆனால் இளைஞரை எப்படியாவது சிக்க வைக்க வேண்டும் என நினைத்த பொலிசார் அவர் மீது அமைதியை குலைக்கும் வகையில் அந்த பெண் வசிக்கும் பகுதியில் நடந்து கொண்டதாக கூறி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து விரைவில் அவர் கைது செய்யப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்