குப்பைத் தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட பச்சிளம் குழந்தை: தத்தெடுக்க போட்டாப் போட்டி

Report Print Arbin Arbin in தெற்காசியா

சிங்கப்பூரில் குப்பைத் தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை ஒன்று பரவலான அனுதாபத்தைப் பெற்றுள்ளதுடன், தத்தெடுக்கவும் பொதுமக்கள் பலர் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிறப்பு விகிதம் மிகவும் குறைவான சிங்கப்பூரில், தற்போது குப்பைத் தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தையை பராமரிக்கவோ தத்தெடுக்கவோ தாங்கள் தயாரென கூறி 6 பெண்கள் முன்வந்துள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் குடியிருப்பு பகுதி ஒன்றில் குப்பைத் தொட்டியில் இருந்து குப்பைகளை அகற்றும் ஊழியர்கள் கடந்த வாரம் பிளாஸ்டிக் பை ஒன்றில் சுற்றப்பட்ட நிலையில் குறித்த பச்சிளம் குழந்தையை மீட்டுள்ளனர்.

அந்த ஊழியர்களால் தக்க சமயத்தில் மீட்கப்படவில்லை என்றால் குழந்தையானது இயந்திரத்தில் சிக்கி நசுக்கப்பட்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை அடுத்து, செல்வந்த தீவு தேசத்தில் கைவிடப்பட்ட அரிய சம்பவம் குறித்து பலர் தங்கள் கவலையை பதிவு செய்துள்ளனர்.

உலக அளவில் பிறப்பு விகிதம் மிகவும் குறைவான நாடுகளில் ஒன்று சிங்கப்பூர். கடந்த 2018 ஆம் ஆண்டின் ஆய்வுகளின் அடிப்படையில் 8 ஆண்டுகளில் மிகவும்ஜ் குறைவான பிறப்பு விகிதத்தை பதிவு செய்துள்ளது.

இதனிடையே பச்சிளம் குழந்தையை கைவிட்ட அந்த பெற்றோர் தொடர்பில் எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

5.7 மில்லியன் மக்கள் தொகை கொண்ட சிங்கப்பூரில் கடந்த 2009 முதல் 2019 வரையான காலகட்டத்தில் இதுபோன்ற 17 சம்பவங்கள் நடந்துள்ளத்காக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்