பனிச்சரிவில் சிக்கி போராடிய சிறுமி!... 18 மணிநேரங்களுக்கு பின் உயிருடன் மீட்பு

Report Print Fathima Fathima in தெற்காசியா

பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீர் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிருக்கு போராடிய 12 வயது சிறுமி 18 மணிநேரங்களுக்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டார்.

கடந்த திங்கட்கிழமை Neelum Valley-ல் பனிச்சரிவு ஏற்பட்டது, இதன்போது சமினா மற்றும் அவரது குடும்பத்தினர் நெருப்பு மூட்டி குளிர்காய்ந்து கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டதாக குறிப்பிடுகிறார்.

தனது கண்முன்னே மகன் மற்றும் மகள்கள் பனிச்சரிவில் சிக்கிக் கொண்டதை கண்டதாகவும், உதவி கேட்டு அக்கம்பக்கத்தினரை அழைத்ததாகவும் சமினாவின் தாய் தெரிவித்துள்ளார்.

இதில் அதிர்ஷ்டவசமாக 12வயது சிறுமியான சமினா பீவி, 18 மணிநேர போராட்டத்துக்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

அப்பகுதியில் கடுமையான பனிப்பொழிவின் காரணமாக இதுவரையிலும் 100 பேர் பலியாகியிருப்பதாக பாகிஸ்தானின் தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்