நடுவானில் விமானத்தை வெடிக்க செய்வதாக விமானிக்கு இளம்பெண் கொடுத்த கடிதம்! அவசரமாக தரையிறக்கப்பட்டது

Report Print Raju Raju in தெற்காசியா

நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது அதில் இருந்த இளம்பெண் தான் உடலில் வெடிகுண்டுகளை கட்டி வைத்துள்ளதாக கூறியதால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

கொல்கத்தாவில் இருந்து மும்பை சென்ற ஏர்ஏசியா விமானத்தில் பயணித்த மோகினி மண்டல் என்ற இளம் பெண் ஒருவர் நடுவானில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பதற்றம் ஏற்பட்டது.

அவர் விமான பணிப்பெண் மூலம் விமானிக்கு கொடுத்தனுப்பிய குறிப்பில் தான் உடலில் வெடிகுண்டுகளை கட்டியிருப்பதாகவும், விமானத்தை வெடிக்கச் செய்யப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த விமானி விமானத்தை கொல்கத்தாவுக்கு திருப்பி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கினார்.

பாதுகாப்புப் படையினர் விமானத்துக்குள் சென்று அந்தப் பெண்ணை வளைத்துப் பிடித்த போது அவரது உடலில் வெடிகுண்டு எதுவும் இல்லை என தெரிய வந்தது.

இது குறித்து விமான நிலைய அதிகாரி கூறுகையில், அப்பெண் வெடிகுண்டு இருப்பதாக எதற்காக கூறினார் என விசாரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவரா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்