எனக்கும் நிர்பயாவின் பெற்றோருக்கும் நாட்டுக்கும் பெரும் நிம்மதியை ஏற்படுத்தும் செயல்: தூக்கிடும் ஊழியர்!

Report Print Balamanuvelan in தெற்காசியா

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளை தூக்கிலிடப்போகும் ஊழியர், தனக்கும், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் பெற்றோருக்கும், நாட்டுக்கும் பெரும் நிம்மதியை ஏற்படுத்தப்போகும் ஒரு செயலை செய்யப்போகிறேன் என்று கூறியுள்ளார்.

இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில், 2012ஆம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் வார்த்தைகளால் விவரிக்க இயலாத அளவுக்கு கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இந்த கோர சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில், அக்‌ஷய் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா மற்றும் முகேஷ் ஆகிய நால்வரும் வரும் 22ஆம் திகதி (ஜனவரி) தூக்கிலிடப்பட உள்ளனர்.

இந்நிலையில், அவர்கள் நால்வரையும் தூக்கிலிடப்போகும் ஊழியரான Pawan Jallad, தான் அவர்களை தூக்கிலிட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

நான்காம் தலைமுறை தூக்கிலிடும் ஊழியரான Pawan, டில்லியிலிருந்து தூக்கிடும் உத்தரவு வருவதற்காக தான் காத்திருப்பதாகவும், தண்டனையை நிறைவேற்ற தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மீரட்டிலுள்ள தனது வீட்டிருந்து திகார் சிறைக்கு சென்று, தூக்கிடுவதற்கு ’ரிகர்சல்’ பார்ப்பதற்கான உத்தரவு வருவதை எதிர்பார்த்து காத்திருப்பதாக Pawan தெரிவித்தார்.

இந்த குற்றவாளிகளை தூக்கிலிடுவது, உண்மையாகவே எனக்கும், நிர்பயாவின் பெற்றோருக்கும், நாட்டிலுள்ள அனைவருக்கும் பெரும் நிம்மதியை ஏற்படுத்தும் என்று கூறிய Pawan, இப்படிப்பட்டவர்களை தூக்கில்தான் போடவேண்டும் என்றார்.

எனக்கு அதிக பயிற்சியெல்லாம் தேவையில்லை, கயிற்றை சோதிக்கவேண்டும், தூக்கிலிடும் இடத்தை ஒரு முறை பார்க்கவேண்டும், குற்றவாளிகளின் உடல் அளவைப் பார்த்து தூக்கு போடுவதற்கு நான் தயாராகவேண்டும் அவ்வளவுதான் என்கிறார் Pawan.

இந்த கூட்டு பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை வழக்கில், முடிந்தவரை சீக்கிரம் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படவேண்டும் என ஏற்கனவே நான் கூறியிருந்தேன் என்கிறார் Pawan.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்