நிர்பயா குற்றவாளிகளுக்கு இரு வாரங்களில் மரண தண்டனை! மீண்டும் சீராய்வு மனு

Report Print Raju Raju in தெற்காசியா

நிர்பயா வழக்கில் மரண தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் அக்சய் குமார்சிங், வினய்குமார் சர்மா, பவுன்குப்தா, முகேஷ்சிங் ஆகிய நான்கு கொடூரன்களுக்கும் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது.

அதன்படி வரும் 22ஆம் திகதி காலை ஏழு மணிக்கு திகார் சிறையில் உள்ள 3-ம் எண் அறை பகுதியில் நான்கு பேரை தூக்கிலிட டெல்லி உயர்நீதிமன்றம் 7ஆம் திகதி உத்தரவிட்டது.

அவர்களை தூக்கில் போடுவதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் தூக்கு தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த சீராய்வு மனுவானது குற்றவாளி வினய்குமார் சர்மா சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்