கண் முன் விழுந்து நொறுங்கி தூள் தூளான அடுக்கு மாடி கட்டிடம்: பீதியில் அலறி ஓடிய மக்கள்!

Report Print Balamanuvelan in தெற்காசியா

சற்று முன்வரை தாங்கள் வாழ்ந்த வீடு, தங்கள் கண் முன் விழுந்து நொறுங்கி தூள் தூளானதைக் கண்டு மக்கள் அலறியடித்து ஓடும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில், 19 வீடுகள் மற்றும்2 கடைகள் கொண்ட ஒரு ஆறு மாடிக் கட்டிடம் ஒன்றில் கீறல்கள் விழுந்துள்ளதாக தகவல் வந்ததையடுத்து, அதிகாரிகள் அந்த கட்டிடத்தில் இருக்கும் அனைவரையும் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள்.

மக்கள் வெளியேறிய 40ஆவது நிமிடம், மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த கட்டிடம் விழுந்து நொறுங்கியது.

சற்று முன் வரை தாங்கள் வாழ்ந்த தங்கள் வீடு, தங்கள் கண் முன்னாலேயே நொறுங்கி தூள் தூளானதைக் கண்டு அதிர்ச்சியிலும், அச்சத்திலும் மக்கள் அலறினார்கள்.

கட்டிடம் நொறுங்கியதில், அந்த பகுதி முழுவதுமே தூசு மண்டலமாகியது.

தாங்கள் முன் கூட்டியே எல்லோரையும் வெளியேற்றிவிட்டதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக தெரிவித்துள்ள பொலிசார், சம்பவத்தால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்று தெரிவித்தனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...