ஒரே நேரத்தில் தூக்கில் தொங்கவிடப்படும் நிர்பயா வழக்கு குற்றவாளிகள்! தூக்கு மேடை குறித்து வெளியான தகவல்

Report Print Raju Raju in தெற்காசியா

நிர்பயா வழக்கின் 4 குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கான தூக்கு மேடையை அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளதாக தெரியவந்துள்ளது.

புதுடெல்லியை சேர்ந்த மருத்துவ மாணவி நிர்பயா கடந்த 2012ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார்.

தேசத்தை உலுக்கிய இந்த சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் ஒருவன் சிறுவன் என கூறி நீதிமன்றம் விடுவித்த நிலையில் இன்னொரு குற்றவாளி சிறையில் தற்கொலை செய்து கொண்டான்.

இதையடுத்து மற்ற 4 கொடுரன்களுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் அவர்களை தூக்கில் ஏற்றுவதற்கான தூக்கு மேடை திகார் சிறையில் தயாரிக்கப்பட்டு வருகிறது, இந்த பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நால்வரும் ஒரே சமயத்தில் தூக்கில் தொங்கவிடபடுவார்கள் என தெரியவந்துள்ள நிலையில் இந்தியாவில் நான்கு குற்றவாளிகள் ஒரே நேரத்தில் தூக்கில் தொங்கவிடப்படுவது திகாரில் தான் முதல் முறை என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...