கணவனை இழந்து தனியாக வசித்து வந்த விதவைப்பெண்! உறவினரின் ஆசை வார்த்தையை நம்பியதால் நேர்ந்த விபரீதம்

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் தனியாக வசித்து வந்த விதவை பெண்ணிடம் லட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றிய அவர் உறவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹரியானா மாநிலத்தின் குருக்சேத்ராவை சேர்ந்தவர் ரேகா ராணி.

இவர் கணவர் சுர்ஜித் குமார் கடந்த 2012ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் திகதி சாலை விபத்தில் உயிரிழந்து விட்டார். இதன்பின்னர் மறுமணம் செய்து கொள்ளாமல் ரேகா தனியாக வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் ரேகாவின் உறவினர் சிஷ்பால் என்பவர் அவரிடம் வந்து உன் வங்கிக்கணக்கில் உள்ள ரூபாய் 7 லட்சத்தை என்னிடம் கொடுத்தால் அதை என் நிறுவனத்தில் முதலீடு செய்து இரட்டிப்பாக்கி கொடுக்கிறேன் என ஆசை வார்த்தை கூறினார்.

ரேகாவும் உறவினர் தானே என நம்பி பணத்தை கொடுத்த நிலையில் பின்னர் சிஷ்பால் அவரை மோசடி செய்துள்ளார்.

இதையடுத்து பொலிசில் ரேகா நேற்று இது தொடர்பில் புகார் கொடுத்தார்.

புகாரை தொடர்ந்து பொலிசார் சிஷ்பால் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...