திருமணமான முதல் இரவில் தங்கள் அறைக்கு சென்ற புதுமணத்தம்பதி! காலையில் உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Raju Raju in தெற்காசியா

பாகிஸ்தானில் திருமணமான நாளின் இரவில் புதுப்பெண் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ள நிலையில், புதுமாப்பிள்ளை ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது உறவினர்களை அதிர்ச்சிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

லாகூரை சேர்ந்த சவீரா (20) என்ற இளம்பெண்ணுக்கும் வாசிம் என்ற இளைஞருக்கும் நேற்று முன் தினம் திருமணம் நடைபெற்றது.

இதையடுத்து அன்று இரவு புதுமணத்தம்பதிகள் தங்களின் படுக்கையறையில் தூங்கி கொண்டிருந்தனர்.

குளிர் அதிகமாக இருந்ததால் இருவரும் சூட்டடுப்பில் நிலக்கரியை கொளுத்தினார்கள். ஆனால் அதை அணைக்க மறந்து அப்படியே தூங்கிவிட்டனர்.

இதையடுத்து அதிலிருந்து வெறியேறிய விஷவாயுவால் இருவருக்கும் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு சுயநினைவை இழந்தார்கள்.

பின்னர் நேற்று காலை அவர்களின் அறைக்கு குடும்பத்தார் வந்து கதவை தட்டிய போது கதவு வெகுநேரமாக திறக்கப்படவில்லை.

இதையடுத்து கதவை உடைத்து பார்த்த போது இருவரும் சுயநினைவை இழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதை தொடர்ந்து இருவரும் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு சவீராவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினார்கள்.

இதோடு வாசிமுக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...