விமான நிலையத்தில் அதிகாரிகளிடம் வசமாக சிக்கிய பயணி... என்ன வைத்திருந்தான் தெரியுமா?

Report Print Santhan in தெற்காசியா

இந்தியாவில் பேண்ட்டில் மறைத்து வைத்து சுமார் 19 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்த முயன்ற இளைஞரை அதிகாரிகள் கைது செய்தனர்.

மும்பையில் இருக்கும் Chhatrapati Shivaji Maharaj சர்வதேச விமானநிலையத்தில் கடந்த சனிக்கிழமை இரவு பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.

அப்போது விஸ்டரா விமான நிறுவனத்தின் விமானத்தில் சென்னை செல்வதற்காக வந்திருந்த Mohammed Ibrahim S என்ற பயணியை அதிகாரிகள் சோதனை செய்த போது, அவர் தன்னுடைய பேண்ட்டின் இடுப்பில் இருக்கும் கால்சட்டையில் சுமா 540 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கைப்பற்றப்பட்ட தங்கத்தின் தற்போதைய மதிப்பு சுமார் 19 லட்சம் ரூபாய் வரும் எனவும், விசாரணைக்காக குறித்த நபர் சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் பின் முழு விபரம் தெரியவரும் அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்