தந்தை இறந்ததை உணராமல் அவர் சிலையை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த 2 வயது குழந்தை! கண்கலங்க வைத்த வீடியோ

Report Print Raju Raju in தெற்காசியா

சத்திஸ்கரில் நக்சல் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த காவலரின் சிலையை அவரின் 2 வயது குழந்தை கட்டிபிடித்து முத்தம் கொடுத்த வீடியோ வெளியாகி மனதை உருக்கியுள்ளது.

மூல்சந்த் கன்வர் என்ற காவலர் கடந்தாண்டு ஜனவரி மாதம் சத்திஸ்கரில் பணியில் இருந்தார்.

அப்போது நக்சல் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற தாக்குதலில் மூல்சந்த் கன்வர் உள்ளிட்ட நான்கு காவலர்கள் சுட்டு கொல்லப்பட்டனர்.

மூல்சந்தின் மரணம் அவரின் மனைவியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

அப்போது ஒரு வயதில் அந்த தம்பதிக்கு பெண் குழந்தை இருந்தது. தற்போது அந்த குழந்தைக்கு இரண்டு வயது ஆகிறது.

இந்நிலையில் நாட்டுக்காக உயிர் நீத்த மூல்சந்தை கெளரவிக்கும் வகையில் அவருக்கு சிலை வைக்கப்பட்டது.

சிலை வைக்கப்பட்ட இடத்துக்கு அவரின் குழந்தை அழைத்து செல்லப்பட்டது.

அங்கு தனது அப்பா சிலையாக இருப்பதை கூட அறியாமல் அவர் நிஜத்தில் இருப்பது போல நினைத்து சிலையை குழந்தை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தது.

இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைராகி காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்