மணமேடையில் மாலையை கழற்றி வீசி மணமகனை உதறி தள்ளிய மணப்பெண்! வெளியான காரணம்

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் திருமணம் நடக்கவிருந்த மணமேடையிலேயே வருங்கால கணவனை, மணப்பெண் உதறிதள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

உத்தரபிரதேச மாநிலத்தின் சிஷோலி கிராமத்தை சேர்ந்த விவேக் என்பவருக்கும் இளம்பெண்ணுக்கும் நேற்று திருமணம் நடக்கவிருந்தது.

மணமேடையில் இருவரும் உட்கார்ந்திருந்த நிலையில் தாலிக்கட்ட சில நிமிடங்களே இருந்தது.

அப்போது மணமகன் விவேக் தனக்கு வரதட்சணையாக கார் வேண்டும் என கூறினார்.

இதையடுத்து அதிரடியாக விவேக்கை திருமணம் செய்ய முடியாது என மாலையை சுழற்றி வீசிய மணப்பெண் அங்கிருந்து பெற்றோருடன் கிளம்பி காவல் நிலையத்துக்கு சென்று புகாரளித்தார்.

பின்னர் பொலிசார் வரதட்சணை கேட்ட விவேக் மற்றும் அவர் குடும்பத்தாரை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

ஆனால், திருமண ஏற்பாடுகளுக்கு ஆன செலவை அவர்கள் மணப்பெண் வீட்டாருக்கு திரும்ப கொடுத்ததால் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

அதே நேரத்தில் மணப்பெண், விவேக்கை திருமணம் செய்து கொள்ள முடியாது என்பதில் இறுதிவரை உறுதியாக இருந்துவிட்டார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்