மாற்றுத்திறனாளி மகனுடன் தனியாக வசித்து வந்த விதவை தாய்... இரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த பயங்கரம்

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் விதவை தாயும், அவரின் மாற்றுத்திறனாளி மகனும் வீட்டில் இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் பிஸ்வாராம் கிராமத்தை சேர்ந்தவர் குர்ஜித் கவுர். இவர் கணவர் சில வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்துவிட்டார்.

இதையடுத்து தனது மாற்றுத்திறனாளி மகன் பர்தீப் சிங் (26) உடன் குர்ஜித் வசித்து வந்தார்.

தன்னுடய நிலத்தை வாடகைக்கு விட்டு அதில் வரும் வருமானத்தில் குடும்ப செலவுகளை குர்ஜித் சமாளித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் குர்ஜித் வீட்டுக்கு அவர் உறவினர் வந்த போது அங்கு தாயும், மகனும் இரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்த தகவலின் பேரில் பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

பொலிசார் கூறுகையில், இருவரையும் வெள்ளிக்கிழமையன்று அக்கம்பக்கத்தினர் கடைசியாக பார்த்துள்ளனர்.

ஆனால் அடுத்தநாள் வெகுநேரமாக கதவை அவர்கள் திறக்காமல் இருந்தும் யாரும் அது குறித்து கவலைப்படவில்லை.

பின்னர் உறவினர் வந்த போதே இருவரும் கொல்லப்பட்டது தெரியவந்தது, கொள்ளை சம்பவத்தின் போதே இந்த கொலை நடந்திருக்கும் என சந்தேகிக்கிறோம் , தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என கூறியுள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்