ஓடும் இரயிலில் உதட்டோடு உதடு முத்தம் கொடுத்து கொண்ட இளம் ஜோடி... முகம் சுழிக்க வைத்த காட்சி

Report Print Santhan in தெற்காசியா

டெல்லியில் ஓடும் இரயிலில் பயணிகள் அதிகமாக இருக்கும் போது, காதல் ஜோடி முத்தமிட்டு கொண்ட வீடியோ வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் இருக்கும் நகரங்களில் டெல்லியில் நவநாகரீகமாக ஆண்கள்-பெண்கள் என இருவரும் பழகி வருகின்றனர். இது வர வர அதிகமாகிக் கொண்டே இருக்கிறது என்று கூறலாம்.

குறிப்பாக மற்ற மெட்ரோ ரயில்களை விட, டெல்லி மெட்ரோ ரயில்களில் காதல் ஜோடிகள் செய்யும் சேட்டைகள் எல்லை மீறல் என்றே கூறலாம். மிகவும் நெருக்கமாக அமர்ந்து செல்வது போன்றவைகளை பார்க்க முடியும்.

தற்போது அதை எல்லாம் மிஞ்சும் வகையில் டெல்லி மெட்ரோ இரயிலில் ஒரு சம்பவம் நடந்துள்ளது, அதாவது ஒரு காதல் ஜோடி அக்கம் பக்கத்தில் பயணிகள் இருக்கின்றனர் என்பதை கூட பார்க்காமல், தொடர்ந்து உதட்டோடு உதடு முத்தம் கொடுக்கின்றனர்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்