மணமகன் திருமணத்துக்கு வர தாமதம் ஆனதால் வேறு நபரை திருமணம் செய்து கொண்ட மணப்பெண்! வினோத சம்பவம்

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் மணமகன் திருமணத்துக்கு தாமதமாக வந்ததால் மணப்பெண் வேறு நபரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இளைஞருக்கும், இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் இரு வாரங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

ஆனால் இந்த திருமணத்தில் சடங்குகள் சரியாக நடத்தப்படவில்லை என இரு வீட்டாரும் நினைத்ததால் மீண்டும் முறைபடி நேற்று முன் தினம் திருமணத்தை நடத்த முடிவெடுத்தனர்.

ஆனால் முதலில் வரதட்சணை எதுவும் வேண்டாம் என மணமகன் வீட்டார் கூறிய நிலையில் தற்போது பைக் மற்றும் பணம் கேட்டனர்.

ஆனால் தங்களால் தற்போது அதை கொடுக்க முடியாது என மணப்பெண் வீட்டார் கூறிவிட்டனர்.

இது தொடர்பாக இரு வீட்டாருக்கும் சண்டை ஏற்பட்ட நிலையில் மணமகன் மற்றும் அவர் வீட்டாரை மணப்பெண் வீட்டார் ஒரு அறையில் வைத்து அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது.

பிறகு அவர்கள் திறந்துவிடப்பட்ட நிலையில் வரதட்சணை தொடர்பில் இரு வீட்டாரும் சமாதானம் பேசினார்கள்.

இதை தொடர்ந்து நேற்று திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

ஆனால் மணமகன் திருமணத்துக்கு வரமுடியாது என அடம்பிடித்தார்.

பின்னர் அவர் பெற்றோர் அவரை சமாதானப்படுத்தி தாமதமாக திருமண மண்டபத்துக்கு அழைத்து சென்ற போது அங்கு மணப்பெண் ஏற்கனவே வேறு நபரை திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து மணமகன் உள்ளிட்ட குடும்பத்தார் அதிர்ச்சியடைந்தனர்.

இது தொடர்பில் இரு வீட்டாரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் பொலிசில் புகார் கொடுத்துள்ளனர்.

இதில் யார் மீது தவறு என விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் மணப்பெண்ணுக்கு திடீரென வேறு மணமகன் கிடைத்தது எப்படி என்பது குறித்தும் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்