ஐஐடி விடுதி அறையில் சடலமாக கண்டெக்கப்பட்ட வெளிநாட்டு மாணவர்! வெளியான அவர் புகைப்படம்

Report Print Raju Raju in தெற்காசியா

ஜப்பானை சேர்ந்த மாணவர் ஒருவர் இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உள்ள ஐஐடி பல்கலைக்கழகத்தின் விடுதி அறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பானின் உள்ள Gifu பல்கலைக்கழகத்தின் மாணவரான Kota Onoda பயிற்சி வகுப்புக்காக அசாம் மாநிலத்தின் குவாத்தி ஐஐடிக்கு சில மாதங்களுக்கு முன் வந்தார்.

அங்கு பயிற்சி எடுத்து கொண்டே ஐஐடி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை Kotaவை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள அவர் நண்பர்கள் முயன்ற நிலையில் வெகுநேரமாக சுவிட் ஆப் என வந்தது.

இதையடுத்து சந்தேகமடைந்த அவர்கள் ஐஐடி நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து Kota தங்கியிருந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்ற போது அவர் தூக்கில் சடலமாக தொங்கி கொண்டிருந்ததை பார்த்த அதிர்ச்சியடைந்த நபர்கள் இது குறித்து பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் Kota-வின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் Kota-வின் அறையில் இருந்து கடிதம் எதுவும் சிக்கவில்லை என கூறிய பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்