இணையதள காதலியை காண புறப்பட்ட இளைஞர்: வெளிநாட்டு பொலிசாரிடம் சிக்கிய பரிதாபம்

Report Print Arbin Arbin in தெற்காசியா

சமூகவலைதளத்தில் அறிமுகமான சுவிஸ் காதலியை காண புறப்பட்டு சென்ற இந்திய இளைஞர் பாகிஸ்தான் பொலிசாரிடம் சிக்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்தியாவின் ஆத்திரா மாநிலத்தை சேர்ந்த மென்பொறியாளரான அந்த இளைஞர் சுவிட்சர்லாந்தில் உள்ள தமது காதலியை காண புறப்பட்டுள்ளார்.

ஐதராபாத் நகரில் பணியாற்றிவரும் பிரசாந்த் என்பவரே தற்போது பாகிஸ்தான் சிறையில் உள்ளார்.

சட்டவிரோதமாக எல்லையை தாண்டியதாக கூறி பாகிஸ்தான் பொலிசார் கைது செய்துள்ளனர். ஆனால் சுவிட்சர்லாந்துக்கு புறப்பட்ட பிரசாந்த் எவ்வாறு பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் சென்று சேர்ந்தார் என்பதற்கு எந்த தகவலும் இல்லை.

இதனையடுத்து பாகிஸ்தான் பொலிசாரின் முன்னிலையில் அவர் தெலுங்கு மொழியில் பேசி வெளியிட்டுள்ள காணொளி ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் பெற்றோரின் நலம் விசாரிக்கும் பிரசாந்த், காவல் நிலையத்தில் இருந்து அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளார்கள் எனவும், இனி சிறைக்கு அனுப்புவார்கள் எனவும், அதன் பின்னர் இந்திய தூதரகத்திடம் தகவல் தெரிவிப்பார்கள் என அதில் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

பிணை தொடர்பான ஏற்பாடுகள் துவங்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் சில மாதங்களில் தாம் இந்தியாவுக்கு திரும்புவதாகவும் அவர் அந்த காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...