விவாகரத்து செய்த மனைவியை பார்க்க அவர் வீட்டுக்கு சென்ற கணவன்... அங்கு நடந்த எதிர்பாராத சம்பவம்

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் விவாகரத்து செய்த மனைவியை பார்க்க சென்ற கணவன் தன்னை தடுத்த நபரை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தின் தியெரடுனை சேர்ந்தவர் பவன் சர்மா. இவர் தனது மனைவி டிம்பிள் மற்றும் நான்கு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் கணவன் - மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பவனும், டிம்பிளும் சில ஆண்டுகளுக்கு முன்னர் விவாகரத்து பெற்றனர்.

இந்நிலையில் நேற்று டிம்பிளை பார்க்க பவன் அவர் வீட்டுக்கு வந்தார், ஆனால் அவரை காண டிம்பிள் விரும்பவில்லை.

இதையடுத்து தனது சகோதரர் சுனிலுக்கு போன் செய்த டிம்பிள் பவன் வந்து தொந்தரவு செய்வதாக கூறினார்.

பின்னர் உடனடியாக அங்கு வந்த சுனிலுக்கும், பவனுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த பவன், சுனிலை கத்தியால் குத்தினார்.

அவரை பிடிக்க அக்கம்பக்கத்தினர் முயன்றும் அவர்களை கத்தியை காட்டி மிரட்டிய பவன் அங்கிருந்து தப்பித்தார்.

இதையடுத்து இரத்த வெள்ளத்தில் சரிந்த சுனில் மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக பொலிசார் கூறுகையில், ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னர் டிம்பிளை காண பவன் வந்த போது சுனில் தடுத்துள்ளார், தபோதும் அவர் தடுத்த நிலையில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது.

பவன் சுனிலை குத்தி விட்டு தப்பியோடிய காட்சி சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது, தலைமறைவாக உள்ள பவனை தேடி வருகிறோம் என கூறியுள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்