இந்தியவிற்கு ஆதரவளிக்கும் நாடுகள் மீது குண்டு வீசப்படும் - மிரட்டல் விடுத்த அமைச்சர்

Report Print Abisha in தெற்காசியா

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவளிக்கும் நாடுகள் மீது குண்டு வீசப்படும் என பாகிஸ்தானின் காஷ்மீர் விவகாரத்துறை அமைச்சர் கில்கித் பல்திஸ்தான் அலி அமின் கந்தபூர், மிரட்டல் விடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக நடந்த நிகழ்ச்சி ஒன்றி பேசிய அமைச்சர் கில்கித் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுடன் மோதல் போக்கு ஏற்பட்டால், போரிடுவதை தவிர பாகிஸ்தானுக்கு வேறு வழியில்லை. எனவே, அந்த வேளையில் பாகிஸ்தானுக்கு பதில் இந்தியாவுக்கு ஆதரவளிக்கும் நாடுகள் அனைத்தும் எங்கள் எதிரிகளாக கருதப்பட்டு, இந்தியாவுடன் சேர்த்து அந்த நாடுகளின் மீதும் குண்டு வீசப்படும் என்று அமைச்சர் கில்கித் பேசியுள்ளார். அது டிவிட்டரில், பகிரப்பட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே போர் ஏற்பட்டால் எது வேண்டுமானாலும் நடக்காலம் என அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் இதேபோன்று மிரட்டல் விடுக்கும் விதமாக தனது உரையில் குறிப்பிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்