28 வயது மனைவியை கொன்றுவிட்டு தற்கொலை செய்த 40 வயது கணவன்! விசாரணையில் வெளியான தகவல்

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் 40 வயதான நபர் தனது 28 வயது மனைவியை சுட்டு கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் விஜய்குமார் ஜெயின் (40). இவர் மனைவி ஆஷா (28). இந்த தம்பதிக்கு ஷாஹில் (13) என்ற மகன் உள்ளான். விஜய்குமார் இனிப்புக்கடை நடத்தி வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை விஜய்குமார் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் மனைவியை சுட்டு கொன்றார், பின்னர் மகனையும் துப்பாக்கியால் சுட்டு விட்டு தன்னையும் சுட்டு கொண்டார்.

இந்த சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக பொலிசுக்கு தகவல் கொடுத்த நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் உயிருக்கு போராடி கொண்டிருந்த விஜய்குமார் மற்றும் ஷாஹிலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி விஜய்குமார் உயிரிழந்த நிலையில் ஷாலிலுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் தொடர்பாக பொலிசார் கூறுகையில், விஜய்குமார் சில நாட்களாக கடுமையான மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.

இதையடுத்தே இந்த செயலை மேற்கொண்டுள்ளார் என கருதுகிறோம், சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்