மனைவியை ரகசிய கமெரா மூலம் நிர்வாணமாக வீடியோ எடுத்த கணவன் செய்த அதிர்ச்சி செயல்... அதிரவைத்த பின்னணி

Report Print Raju Raju in தெற்காசியா
246Shares

இந்தியாவில் மனைவியை நிர்வாணமாக வீடியோ எடுத்து தனது நெருங்கிய நண்பனுக்கு பணத்துக்காக அனுப்பிய கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையை சேர்ந்த 23 வயதான நபருக்கும் இளம்பெண்ணுக்கும் கடந்த 2015-ல் திருமணம் நடந்தது.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் மனைவிக்கு தெரியாமல் ரகசிய கமெரா மூலம் அவர் நிர்வாணமாக இருக்கும் வீடியோவை கணவர் எடுத்துள்ளார்.

பின்னர் அதை தனது நெருங்கிய நண்பருக்கு அனுப்பியுள்ளார்.

இதை தெரிந்து கொண்ட மனைவி கணவரின் மோசமான நடத்தை காரணமாக அவரை பிரிந்து தாய் வீட்டுக்கு சென்றார்.

இந்நிலையில் மே மாதம் பிரச்னையை பேசி தீர்த்து கொள்ளலாம் என மனைவியை வீட்டுக்கு வரவழைத்த கணவன் அவரை பலாத்காரம் செய்தார்.

பின்னர் தனது நெருங்கிய நண்பருடன் தனிமையில் மனைவியை இருக்க வற்புறுத்தினார், இப்படி செய்தால் நண்பன் தனக்கு நிறைய பணம் தருவான் என கூறிய நிலையில் மனைவி அதை ஏற்காமல் அங்கிருந்து தப்பி சென்றார்.

இந்நிலையில் கடந்த 23ஆம் திகதி கணவரின் நண்பர் மனைவியை சந்தித்தும் தன்னிடம் அவரின் நிர்வாண வீடியோக்கள் இருப்பதாகவும், தன்னுடன் தனிமையில் இருந்தால் ரூ 2000 பணம் தருவதாகவும் கூறினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் இது குறித்து பொலிசில் புகாரளித்தார்.

இதையடுத்து பொலிசார் அப்பெண்ணின் கணவர் மற்றும் நண்பரை கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த வீடியோவையும் கைப்பற்றியுள்ளனர்.

கணவர் மோசமானவர் என முன்னரே தெரிந்து மனைவி ஏன் புகார் தரவில்லை என கேள்வியெழுந்துள்ள நிலையில் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்