தவறான வாழ்க்கை முறையால் 30 வயதிலேயே இறக்கும் இளைஞர்கள்! ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

Report Print Kabilan in தெற்காசியா
240Shares

இந்தியாவில் தவறான வாழ்க்கை முறையால் 30 வயதிலேயே இளைஞர்கள் இறப்பை சந்திப்பதாக ஆய்வில் அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரும் மருத்துவ ஆய்வு நிறுவனமான ஹெல்தியன் ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது.

இந்த ஆய்வில் 30 முதல் 44 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் தவறான வாழ்க்கை முறைப் பழக்கங்களால் இறப்பதாக தெரிய வந்துள்ளது.

இதற்கு காரணம் உடலில் அதிகளவில் கொழுப்பு சேர்த்தல், உடல் பருமன், இதய நோய் போன்றவை தான் என்று கூறப்படுகிறது. அதேபோல் பெண்கள் 50 முதல் 59 வயதிற்குள் தான் இந்த பிரச்னைகளை சந்திப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின்படி, தற்போது 4 லட்சம் நோயாளிகளில் 2.25 லட்சம் ஆண்கள் இளைஞர்கள் என்றும், பெண்கள் 1.75 சதவிதம் என்றும் தெரிய வந்துள்ளது.

உலக சுகாதாரத்துறை அமைச்சகம், உலகம் முழுவதும் 60 சதவிதம் இறப்பு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 44 சதவிதம் இளம் வயதில் இறந்தவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இவர்களில் பெரும்பாலானோரின் இறப்புக்கு காரணம், வாழ்க்கைமுறையின் தவறான பழக்கங்கள் தான் என்று தற்போது தெரிய வந்துள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்