இந்தியாவுடன் போருக்கு வாய்ப்பு! பகீர் கிளப்பிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்

Report Print Kabilan in தெற்காசியா
130Shares

காஷ்மீர் பிரச்னை தொடர்பாக இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா நீக்கியது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், பேச்சுவார்த்தை மூலம் இரு நாடுகளும் இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், ஐ.நா காலநிலை மாற்றம் மாநாட்டில் கலந்துகொண்ட பாகிஸ்தான் பிரதமர், இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூளும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

AP Photo

இதுதொடர்பாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ‘கடந்த 50 நாட்களாக காஷ்மீர் மக்கள், 9 லட்சம் ராணுவ வீரர்களால் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். மக்கள், கூட்டம் கூட்டமாக கைது செய்யப்படுகிறார்கள்.

மருத்துவமனைகள் இயங்கவில்லை. செய்திகள் மூடி மறைக்கப்படுகின்றன. 80 லட்சம் மக்களும் திறந்தவெளி சிறையில் வைக்கப்பட்டு இருப்பது, இந்த காலத்தில் முன் எப்போதும் இல்லாதது ஆகும்.

ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டால் என்ன நடக்குமோ என்பதுதான் மிகப்பெரிய கவலையாக இருக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் இந்த இரு அணு ஆயுத நாடுகளும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்