அரைகுறை ஆடையுடன் படுக்கையில் இறந்து கிடந்த மனைவி! வீட்டுக்கு வந்த கணவன் கண்ட மேலும் ஒரு அதிர்ச்சி காட்சி

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் தம்பி மனைவி மற்றும் மகனை கொடூரமாக கொலை செய்த அண்ணனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையை சேர்ந்தவர் யோகேஷ் சவான் - ஜெயஸ்ரீ தம்பதிக்கு அவினாஷ் (2) என்ற மகன் உள்ளான்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் வேலைக்கு சென்றுவிட்டு யோகேஷ் இரவு 10.30 மணிக்கு வீட்டுக்கு வந்து கதவை தட்டிய போது கதவு திறக்கப்படவில்லை.

பின்னர் பயத்தில் அவர் பொலிசுக்கு தகவல் தெரிவித்த நிலையில் பொலிசார் உதவியுடன் யோகேஷ் கதவை திறக்கும்போது கடும் அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் படுக்கையறையில் உள்ள கட்டிலில் ஜெயஸ்ரீ அரைகுறை ஆடையுடன் சடலமாக கிடந்ததோடு, அவர் மகனும் அருகில் சடலமாக கிடந்தான்.

அப்போது அந்த அறையின் ஓரத்தில் யோகேஷ் அண்ணன் சுரேஷ் இருந்தது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரை பொலிசார் கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில், சுரேஷ் பல மாதங்களாக வேலை இல்லாமல் இருந்ததோடு குடிபழக்கத்துக்கும் அடிமையாகியுள்ளார்.

இதையடுத்து யோகேஷ் மற்றும் ஜெயஸ்ரீ ஆகியோர் சுரேஷை அசிங்கப்படுத்தி திட்டியதோடு வீட்டை விட்டு வெளியேற சொன்னார்கள்.

இதன் பின்னர் சில நாட்கள் வீட்டுக்கு வராமல் இருந்த சுரேஷுக்கு ஓன்லைன் உணவு நிறுவனத்தில் வேலை கிடைத்தது.

இதன் பின்னர் வீட்டுக்கு அவர் வந்த போது பெற்றோர் ஊருக்கு சென்றிருந்தனர், தம்பி யோகேஷ் வேலைக்கு போயிருந்தார்.

அப்போது வீட்டில் இருந்த தம்பி மனைவி ஜெயஸ்ரீயுடன் சுரேஷ் சண்டை போட்ட நிலையில் அவரையும் சிறுவனையும் தலையணையால் அமுக்கி கொன்றுள்ளது தெரியவந்துள்ளது.

சுரேஷ் அளித்த வாக்குமூலத்தில், வேலை இல்லாமல் இருந்த கிண்டல் செய்ததோடு வீட்டுக்குள்ளும் அனுமதிக்கவில்லை. இதற்கு பழிவாங்கவே கொன்றேன் என கூறியுள்ளார்.

இதனிடையில் ஜெயஸ்ரீ அரைகுறை ஆடையுடன் இறந்து கிடந்ததால் அவர் பலாத்காரம் செய்யப்பட்டாரா எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்