பொதுமக்களை அச்சுறுத்தி வந்த தீவிரவாதி சுட்டுக்கொலை!. 

Report Print Abisha in தெற்காசியா

ஜம்மு காஷ்மீரின் சோப்பூர் நகரில் பழவியாபாரி ஒருவரை தாக்கிய தீவிரவாதி சுட்டுக்கொலப்பட்டுள்ளான்

காஷ்மீரின் சோப்பூரில் சமீபத்தில் ஒரு பழவியாபாரியை ஒருவர் தாக்கியதாக போலீஸ் டிஜிபி தில்பாக் சிங்யிடம் புகார் வந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் விசாரித்தபோது, அந்த பழவியாபாரியை தாக்கியது ஒரு தீவிரவாதி என்று கண்டறிந்துள்ளனர். அந்த தீவிரவாதியின் பெயர் ஆசிப் மக்பூல் பாட். சோப்பூர் பகுதியில் பெரும் பதற்றத்தை தீவிரவாதி பாட் ஏற்படுத்தி வந்துள்ளார் என்பதையும் அறிந்து கண்காணிப்பு வழையத்திற்குள் வைத்து விசாரித்துள்ளனர்.

குறிப்பாக தீவிரவாதி பாட், போஸ்டர்களை ரகசியமாக அச்சடித்து ஒட்டுதல், மக்களை அச்சுறுத்தும் வகையில் வாசகங்களை வெளியிடுதல் போன்றவற்றை கடந்த ஒருமாதமாக செய்து மக்களை அச்சுறுத்தி வந்துள்ளார். கடைகள், வர்த்தக நிறுவனங்களை மக்கள் திறக்க முயன்றாலும் அதை திறக்கவிடாமல் தடுத்து வந்துள்ளான்

இந்நிலையில், சோப்பூரில் ஒருவீட்டில் தீவிரவாதி பாட் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததுள்ளது. இதையடுத்து, இன்று அதிகாலை அந்த வீ்ட்டை சுற்றிவளைத்து மக்பூல் பாட்டையை வெளியேற கூறியுள்ளனர்.

ஆனால், திடீரென போலீஸார், பாதுகாப்புப் படையினர் மீது பாட் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினார், துப்பாக்கியால் சுடத் தொடங்கினார்.

இந்த குண்டுவீச்சிலும், துப்பாக்கிச் சூட்டிலும் இரு போலீஸார் காயமடைந்தனர், அவர்கள் மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பிவைக்கப்பட்டனர். பாதுகாப்புப்படையினர் அளித்த தகுந்த பதிலடியில் தீவிரவாதி பாட் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதில், அப்பகுதியை சேர்ந்த 3பேர் காயம் அடைந்துள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்