வெளிநாட்டில் கணவன்... இளம் மனைவியின் முறைதவறிய நடத்தை: கையும் களவுமாக பிடித்த மாமியார்

Report Print Arbin Arbin in தெற்காசியா

தமிழகத்தில் மருமகளின் முறைதவறிய நடத்தையை அறிந்த மாமியார், காமுகனுடன் நெருக்கமாக இருந்த நிலையில் கையும் களவுமாக பிடித்துள்ளார்.

மருமகளின் இந்த முறைதவறிய நடத்தையை அம்பலப்படுத்த திட்டமிட்ட அவர், இருவரையும் அறைக்குள் வைத்து பூட்டியுள்ளார்.

ஆனால் அவரின் திட்டத்தை ஊகித்த அந்த ஜோடி, பின் வாசல் வழியாக தப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தற்போது 32 வயதாகும் சுலோச்சனாவுக்கு திருமணம் நடந்துள்ளது.

சுலோச்சனாவின் கணவன் சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் விடுமுறைக்கு ஊருக்கு திரும்பிய சுலோச்சனாவின் கணவன், மனைவியின் ஆசையை நிறைவேற்ற தனியாக ஒரு குடியிருப்பை பரிசளித்துள்ளார்.

சிங்கப்பூரில் தாம் சம்பாதிக்கும் பணம் முழுவதும் மனைவியின் பேரில் ஊருக்கு அனுப்பி வந்துள்ளார்.

இதனிடையே தனியாக இருந்த சுலோச்சனாவுக்கு புதுக்கோட்டை பகுதியில் உள்ள நபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளடைவில் பாலியல் உறவு வைத்துக் கொள்ளும் அளவுக்கு வளர்ந்தது. மட்டுமின்றி, இரவுகளில் இருவரும் ஒன்றாக தங்கிச் செல்லும் நிலைக்கு முன்னேறியது.

இந்த விவகாரம் சுலோச்சனாவின் மாமியார் காதுக்கு எட்டியதும், தமது மருமகளின் முறைதவறிய நடத்தையை அம்பலப்படுத்த முடிவு செய்துள்ளார்.

அதன்படி சம்பவத்தன்று இரவு சுலோச்சனாவின் குடியிருப்புக்கு சென்ற அவர், காலை வரை காத்திருந்து தமது மருமகளையும் அவரது காமுகனையும் கையும் களவுமாக பிடித்துள்ளார்.

ஆனால் இருவரும் பின் வாசல் வழியாக தப்பியுள்ளனர். தற்போது இந்த விவகாரம் தொடர்பில் வழக்குப் பதிந்த பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்