வயிற்று வலியால் துடித்த 14 வயது சிறுமி... ஸ்கேன் ரிப்போர்ட்டில் என்ன இருந்தது தெரியுமா? வெளியான புகைப்படம்

Report Print Santhan in தெற்காசியா

இந்தியாவில் வயிற்று வலி மற்றும் வாந்தியால் கடும் அவதிப்பட்டு வந்த சிறுமியின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்த போது , சிறுமியின் வயிற்றின் உள்ளே சுமார் 1 கிலோவிற்கு மேல் முடி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேசத்தின் Gonda-வைச் சேர்ந்த பூஜா என்ற 14 வயது சிறுமி கடுமையான வயிற்று வலி மற்றும் தொடர்ந்து வாந்தி எடுத்து வந்துள்ளார்.

இதனால் பூஜாவின் பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிடிஸ்கேன் எடுக்கும் படி கூறியுள்ளனர்.

அதன் பின் சிசிஸ்கேன் சோதனையில் வயிற்றின் உள்ளே எதோ உருண்டையாக இருப்பதைக் கண்டுள்ளனர். இதையடுத்து மருத்துவர்கள் நடத்திய அறுவை சிகிச்சையில், சிறுமியின் வயிற்றில் இருந்து சுமார் 1.4 கிலோவிற்கு முடி உருண்டை போன்று இருந்துள்ளது.

அந்த சிறுமியிடம் விசாரித்த போது அவருக்கு முடி திண்ணும் பழக்கம்(Rapunzel syndrome) இருந்துள்ளது, இதை அந்த சிறுமியே மருத்துவர்களிடம் ஒப்புக் கொண்டுள்ளார்.

இது குறித்து சிறுமிக்கு சிகிச்சை பார்த்த மருத்துவர் கூறுகையில், இதை அப்படியே கவனிக்காமல் விட்டிருந்தால், சிறுமியின் உயிருக்கூட ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்று அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்