இந்தியரால் சிரித்து விளையாடும் பாகிஸ்தான் குழந்தை... நெகிழ்ச்சியடைய வைத்த பதிவு!

Report Print Abisha in தெற்காசியா

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மாசுவராஜ் குறித்து பாகிஸ்தானியர் பதிவிட்ட சமூக ஊடக பதிவு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அவர் மீண்டும் பிறக்கவேண்டும். அதுவும் எங்கள் நாட்டில்... இங்கு, அரசியல்வாதியாக அவர் பணியாற்ற வேண்டும்’ என்று சமூக ஊடகத்தில் சுஷ்மா குறித்து ஒரு பாகிஸ்தானி பதிவிட்டுள்ளார். காரணம் அவரின் செயல்பாடுகள்தான்.

ஆம், பாகிஸ்தான் நாட்டு குழந்தைக்கு அவர் செய்ய உதவியை இது நினைவு படுத்துகின்றது. குழந்தையின் பெயர் ஷீரின் சிராஸ். அவளுக்கு 1 வயது இருக்கும் போது இதயத்தில் பெரும் கோளாறு இருந்தது. உயிர் காக்கும் சிகிச்சைக்கு பாகிஸ்தானில் வசதியில்லாத சூழல். ‘இந்தியாவுக்குக் கொண்டு போனால் அவள் பிழைப்பாள்’ என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த நாள் இந்தியத்தூதரகம் வந்து மருத்துவ விசாவுக்காக விண்ணப்பித்திருக்கிறார் குழந்தையின் தாய். ஆனால் விசா வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பல நாள் அலைந்தும் பயனில்லை. இந்தியத் தூதரகத்தில் இருக்கும் ஓரு ஊழியர், ‘சுஷ்மாவை அணுகுங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

குழந்தையில் தாய் உடனடியாக சுஷ்மாவின் டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயம் குறித்து தெரிவித்து மகளை காப்பாற்ற கோரியுள்ளார். அடுத்த சில நாள்களில் அவரை நேரில் அழைத்து விசாவைக் கையளித்தது இந்தியத்தூதரகம்.

தற்போது அந்த குழந்தை சிரித்து விளையாடிக்கொண்டிருக்கிறாள்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்