ஒரே ஒரு தொலைபேசி அழைப்பால் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த கோடீஸ்வர பெண்... அதிர்ச்சி பின்னணி

Report Print Raju Raju in தெற்காசியா

பஞ்சாப் மாநில முதல்வரின் மனைவியை ஒரு போன் கால் மூலம் மோசடி நபர், ரூ. 23 லட்சத்தை ஏமாற்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் முதல்வர் அமரீந்தர் சிங்கின் மனைவி பிரினீத் கவுர்.

பிரினீத் கவுருக்கு சில தினங்களுக்கு முன்னர் ஒரு போன் வந்தது, அதில் பேசிய ஆண், தான் ஸ்டேட் பேங்கில் இருந்து அதன் மேலாளர் பேசுவதாக கூறினார்.

பின்னர் உங்கள் வங்கிகணக்கில் சம்பளம் போட வேண்டும் என்று கூறி பிரினீத்தின் வங்கி கணக்கு எண், ஏடிஎம் நம்பர் எண் போன்றவற்றை கேட்டு வாங்கினார்.

இதன்பின்னர் சில நிமிடங்கள் கழித்து பிரினீத் செல்போனுக்கு மெசேஜ் வந்தது.

அதில் அவர் வங்கி கணக்கிலிருந்து ரூ 23 லட்சம் எடுக்கப்பட்டதாக வந்ததை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து பொலிசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் பொலிசார் நேற்று இந்த மோசடியில் ஈடுபட்ட நபரை கைது செய்துள்ளனர்.

அவரிடம் விசாரணை நடந்து வரும் நிலையில் முதல்வர் மனைவியே அஜாக்கிரதையால் பணத்தை இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமரீந்தர் சிங் தனது சொத்து மதிப்பு ரூபாய் 58.44 கோடி என கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் பிரமாண பத்திரத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்