'இன்னொரு புல்வாமா தாக்குதல் நடத்தப்படலாம்' எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்: எதற்கு தெரியுமா?

Report Print Abisha in தெற்காசியா

காஷ்மீர் விவகாரம் குறித்து மற்றொரு புல்வாமா தாக்குதல் நடத்தப்படலாம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரத்தை கொடுத்துவந்த சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியதற்கு சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும்போதே எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் காஷ்மீர் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் பேசியவர், சிறப்பு சட்டம் ரத்தால் காஷ்மீரிகள் போராடுவார்கள். இந்தியா அவர்கள் மீது ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிடும். பின்னர் புல்வாமா போன்ற தாக்குதல்கள் மீண்டும் நிகழும். அவர்கள் மீண்டும் நம் மீது பழியை வைக்க முயற்சிப்பார்கள். அவர்கள் மீண்டும் நம்மை தாக்கக்கூடும். நாமும் திருப்பி தாக்குவோம்.

அந்த போரில் யார் வெல்வார்கள்...? யாரும் வெல்ல மாட்டார்கள். மாறாக அது உலகம் முழுவதிலும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்