வயிற்று வலியால் துடித்த இளம்பெண்... அறுவை சிகிச்சையில் மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Santhan in தெற்காசியா

இந்தியாவில் கடுமையான வயிற்று வலியால் துடித்த பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்த போது, உள்ளே இருந்த நகைகள் மற்றும் நாணயங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேற்குவங்கத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் கடந்த இரண்டு மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் பெற்றோர் அவரை வீட்டிலே வைத்து கண்காணித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அப்பெண்ணிற்கு வயிற்று வலி அதிகமாகவே குடும்பத்தினர் அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சையளித்த போதும் வயிற்று வலி தீர்ந்த பாடில்லை.

இதனால் அங்கிருக்கும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.அப்போது மருத்துவர்கள் அந்த பெண்ணின் வயிற்றை சோதித்து ஸ்கேன் செய்து பார்த்த போது,சில பொருள்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

கீழே கிடந்த பொருட்களை எடுத்து எதையாவது முழுங்கியிருக்கலாம் என்று மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

அப்போது அவரது வயிற்றிலிருந்து 1.5 கிலோ அளவுக்கு நகைகள் மற்றும் காசுகள் இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதன் பின் அதை அகற்றிய நிலையில், குறித்த பெண் தற்போது நலமாக உள்ளார்.

மேலும் அந்தப் பெண்ணின் வயிற்றில் 5 மற்றும் 10 ரூபாய் நாணயங்கள், மூக்குத்தி, தோடு, வளையல், கைகளில் அணியும் பேட் ஆகியவை இருந்தன. அவற்றில் சில தங்க நகைகளும் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அந்த பெண்ணின் தாயார் இது குறித்து கூறுகையில், அவளுக்கு தொடர்ந்து வயிற்று வலி இருந்து கொண்டே இருந்தது. மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால், தங்களின் கண்காணிப்பிலே வைத்திருந்தோம்.

என்ன சாப்பிட்டாலும், அதை தூக்கி எறிய துவங்கினாள். இதனால் அவளை மருத்துவமனையில் அனுமதித்தோம், அவள் விழுங்கியிருந்த நகைகள் எல்லா எங்கள் நகைகள் தான், ஆனால், இதை விழுங்கியிருப்பாள் என நாங்கள் நினைக்கவில்லை. காணாமல் போன பொருள்கள் குறித்துக் கேட்டுள்ளோம். அப்போது எல்லாம் அழத் தொடங்கிவிடுவார் என்று கூறியுள்ளார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்