கணவனை பிரிந்து இளைஞனுடன் தகாத உறவு வைத்திருந்த பெண்னுக்கு நேர்ந்த கதி... விசாரணையில் வெளியான உண்மை

Report Print Santhan in தெற்காசியா

இந்தியாவில் தன்னுடன் தவறான உறவு வைத்திருந்த பெண்னை, இளைஞர் அடித்து கொலை செய்து, புதைத்துள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சித்தூர் மாவட்டம் ராமச்சந்திராபுரத்தில் உள்ள பி.வி.புரத்தை சேர்ந்தவர் சேகர். இவருக்கு பானு என்ற மனைவி உள்ளார்.

இந்நிலையில் சேகருக்கும், பானுவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், பானு கடந்த இரண்டு வருடமாக கணவனை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார்.

அப்போது தான் அவருக்கு அதே ஊரைச் சேர்ந்த ஜே.சி.பி வாகன ஓட்டுனர் ஹரி என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளைடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு இருந்துள்ளது.

இதனால் ஹரி கேட்ட போதெல்லாம் பெற்றோரிடம் பணத்தை கடனாக வாங்கி அவருக்கு கொடுத்து வந்துள்ளார்.

அதன் பின் மீண்டும் அந்த பணத்தை கேட்ட போது, கொடுக்க மறுத்ததால், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்து பானுவின் பெற்றோர் திரும்ப பெற்றுள்ளனர்.

இதனால் கடும் ஆத்திரத்தில் இருந்த ஹரி இந்த விவகாரத்தில் தனக்கு ஆதரவாக இல்லாததால், அவரை ராமாபுரத்தில் இருக்கும் ஏரிக்கரைக்கு செல்போன் மூலம் அழைத்து பேசியுள்ளார்.

அதன் பின் அவரை கீழே தள்ளி அடித்து கொலை செய்து அதன் பின் ஜே.சி.பி மூலம் மண்ணை தோண்டி புதைத்துள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களாக பானுவை காணவில்லை குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், ஹரி சிக்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்