14 ஆண்டுகளுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண் உயிரோடு இருப்பது அம்பலம்! அதிர்ச்சி பின்னணி

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் 14 ஆண்டுகளுக்கு முன்னர் தற்கொலை செய்த பெண் தற்போது உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளதோடு, அது தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

குஜராத் மாநிலத்தின் பல்வா கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் மனைவி பிக்பென்.

பிகிபென் கடந்த 2005ஆம் ஆண்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் 14 வருடங்கள் கழித்து பிக்பென் வேறு கிராமத்தில் உயிருடன் வாழ்ந்து வருவது தெரியவந்துள்ளது.

கணவரை பிரிந்த பிக்பென், விஜுபா என்ற நபரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வரும் நிலையில் பொலிசார் இருவரையும் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிக்பென்னுக்கு விஜிபா என்ற ஆணுடன் தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருடன் ஓட்டம் பிடிக்க முடிவெடுத்தார் பிக்பென்.

ஆனால் யாரிடமும் சிக்காமல் இருக்க ஒரு பலே திட்டத்தை போட்டார்.

அதன்படி மனநலம் சரியில்லாத ஒரு பெண்ணை தீயிட்டு கொளுத்தி முகத்தை சிதைத்து பிக்பென்னும், விஜிபாவும் கொலை செய்துள்ளனர்.

பின்னர் அவருக்கு தனது ஆடையை உடுத்திய பிக்பென், விஜிபாவுடன் ஓட்டம் பிடித்துள்ளார்.

பொலிசார் பிக்பென் குடும்பத்தாரிடம் விசாரித்த போது புடவையை பார்த்து இறந்தது பிக்பென் தான் என கூறினர்.

இதையடுத்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக வழக்கை பொலிசார் முடித்தனர்.

இந்த சூழலில் 14 ஆண்டுகள் கழித்து இரு தினங்களுக்கு முன்னர் பிரகாஷின் நண்பர் வேலை விடயமாக ஒரு ஊருக்கு சென்ற போது அங்கு பிக்பென் உயிரோடு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் இது குறித்து அவர் பொலிசில் புகார் அளித்தார், இதையடுத்து பொலிசார் பிக்பென், விஜிபா மற்றும் இந்த கொலைக்கு உதவிய சிலரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பின்னரே அனைத்து விடயங்களும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்