கணவரின் நண்பர் என நம்பி இரவில் அவர் வீட்டில் தனியாக தங்கிய இளம்பெண்... நடந்த விபரீதம்

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் கணவரின் நண்பரை நம்பி அவர் வீட்டில் சென்று தங்கிய இளம் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவை சேர்ந்த இளம் பெண்ணின் கணவர் வழக்கு ஒன்றில் சிறையில் உள்ளார்.

இந்நிலையில் கணவரை பார்க்க நீதிமன்றத்துக்கு மனைவி வந்த நிலையில் பார்க்கமுடியவில்லை.

இதையடுத்து அதே வழக்கில் தொடர்புடைய கணவரின் நண்பர் விக்ரம்ஜித் சிங் என்பவர், இரவாகிவிட்டது. நீங்கள் இப்போது உங்கள் வீட்டுக்கு செல்லமுடியாது.

அதனால் என் வீட்டில் இரவு பாதுகாப்பாக தங்கிவிட்டு காலையில் செல்லுங்கள் என கூறினார்.

சரி, கணவரின் உயிர் நண்பர் தானே அழைக்கிறார் என நம்பி விக்ரம்ஜித் அவர் சகோதரர் பவன் மற்றும் அவர் நண்பருடன் அப்பெண் சென்றார்.

அங்கு பெண்கள் யாரும் இல்லாததால் சந்தேகமடைந்த அவர் இது குறித்து விக்ரம்ஜித்திடம் கேட்டார்.

அப்போது தனது தாய் மற்றும் மனைவி வெளியில் சென்றுள்ளதாக அவர் கூறினார்.

இதையடுத்து தனக்கு தரப்பட்ட உணவை அப்பெண் சாப்பிட்ட பின்னர் மயங்கினார்.

இதையடுத்து காலையில் கண்விழித்த போது தான் நிர்வாண நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அங்கிருந்து தப்பி சென்று பொலிசில் புகார் அளித்தார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் அவர்களில் யாரும் இன்னும் கைது செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்