கோடீஸ்வர கணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய அழகிய மனைவி... வீடியோ ஆதாரத்தால் வெளியான உண்மை

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் மனைவியால் கொலை செய்யப்பட்ட கோடீஸ்வரர் கடந்த ஆண்டே இது குறித்து பயத்தில் வீடியோ பதிவு செய்திருந்ததை பொலிசார் தற்போது கண்டுப்பிடித்துள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் என்.டி திவாரி மகனும், கோடீஸ்வரருமான ரோகித் திவாரி (39) கடந்த ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி தனது வீட்டில் மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடந்தார்.

இதயநோயாளியான ரோகித் மாரடைப்பால் இறந்ததாக கூறப்பட்ட நிலையில் பின்னர் அவர் கொலை செய்யப்பட்டார் என பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.

இது தொடர்பான விசாரணையில் ரோகித்தின் மனைவி அபூர்வா தான் அவரை கழுத்தை நெரித்தும், தலையணையால் முகத்தை அமுக்கியும் கொலை செய்தார் என்பது உறுதியானது.

இந்நிலையில் பல்வேறு கட்ட விசாரணைகளுக்கு பின்னர் கடந்த வியாழன் அபூர்வா மீது பொலிசார் கொலை வழக்கை பதிவு செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் கடந்தாண்டு செப்டம்பர் 17 ஆம் திகதி ரோகித்துக்கு இதய அறுவை சிகிச்சை நடந்தது.

சிகிச்சைக்கு சில மணி நேரத்துக்கு பின்னர் அவர் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார்.

அதில், என் மனைவி என்னை எப்போது வேண்டுமானாலும் கொலை செய்துவிடுவாள்.

என்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் அபகரிக்க வேண்டும் என்பதே அவள் எண்ணம் என அதில் கூறியிருந்தார்.

இது தொடர்பான வீடியோ சமீபத்தில் தான் பொலிசார் கையில் கிடைத்துள்ளது.

பொலிசார் கூறுகையில், விருப்பமில்லாமல் தான் ரோகித்தை அபூர்வா மணந்துள்ளார்.

ரோகித்தின் சொத்துக்கள் மற்றும் அவரால் தானும் அரசியலில் பெரிய இடத்தை அடையலாம் என கணக்கு போட்டுள்ளார் அபூர்வா.

அதே போல வேறு பெண்ணுடன் ரோகித்துக்கு தொடர்பு இருப்பதாக கருதிய அபூர்வா இது தொடர்பாகவும் அவருடன் சண்டை போட்டுள்ளார்.

இதையடுத்து அபூர்வாவை விவாகரத்து செய்ய விரும்புவதாக ரோகித் நண்பர்களிடம் கூறியுள்ளார், ரோகித் தன்னை பிரிந்தால் சொத்துக்கள் தனக்கு கிடைக்காமல் போய்விடுமோ என பயந்திருந்த அபூர்வ அவரை கொலை செய்துவிட்டு, மாரடைப்பால் இறந்ததாக நாடகமாடினார்.

தற்போது ரோகித் பேசிய வீடியோ எங்களுக்கு கிடைத்துள்ள பெரிய ஆதாரம் என கூறியுள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...