என் அப்பாகிட்ட இருந்து எங்களை காப்பாத்துங்க..அவர் என்னை கொன்னுடுவாரு... புதுப்பெண் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் எம்.எல்.ஏ-வாக உள்ள பப்பு என்பவரின் மகள் தாழ்ந்த சாதி நபரை திருமணம் செய்து கொண்ட நிலையில் தனது தந்தையால் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி வெளியிட்டுள்ள வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் பரிலி தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருப்பவர் பப்பு பர்தவுல்.

இவரின் மகள் தாழ்ந்த சாதியை சேர்ந்த இளைஞரை குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் பப்பு தன்னையும் தனது கணவரையும் ஆணவக்கொலை செய்யலாம் என பயந்து போயுள்ள அவர் மகள் இது தொடர்பில் இரண்டு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் பேசிய மகள், தங்களை மிரட்ட அனுப்பிய குண்டர்களை பப்பு திரும்ப அழைத்து கொள்ள வேண்டும் என கோரியுள்ளார்.

மேலும், என் தந்தை எங்களை கொலை செய்துவிடுவாரோ என பயமாக உள்ளது, மக்களும் பொலிசாரும் தான் எங்களுக்கு உதவவேண்டும்.

எங்களுக்கோ அல்லது குடும்பத்துக்கோ எதாவது ஆபத்து நேர்ந்தால் அதற்கு பப்பு தான் முழு பொறுப்பு என இருவரும் சேர்ந்து வீடியோவில் தெரிவித்துள்ளனர்.

ஒரு எம்.எல்.ஏவின் மகளே தந்தையால் தங்கள் உயிருக்கு ஆபத்து என கூறி வீடியோவை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...