நாங்கள் இறந்தால் தான் அவர்களுக்கு நிம்மதி.. கண்ணீர் வரவழைக்கும் தம்பதி பேசிய வீடியோ

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் மகனும், மருமகளும் சேர்ந்து எப்படியெல்லாம் தங்களை கொடுமைப்படுத்தி வீட்டை விட்டு துரத்த முயற்சித்தனர் என வயது முதிர்ந்த தம்பதி பேசிய வீடியோ கண்ணீர் வரவழைக்கும் விதத்தில் உள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இந்திரஜீத் (68) என்ற நபர் தனது மனைவியுடன் சேர்ந்து பேசிய வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.

அதில் இந்திரஜீத் கூறுகையில், எனக்கு இதயநோய் உள்ளது, என் மனைவிக்கு உடலில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளது.

எங்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி வேறு ஊரில் வசிக்கிறார்.

எங்களுடன் வசிக்கும் என் மகனும், மருமகளும் எங்களை மிகவும் துன்புறுத்துகின்றனர். எங்களை வீட்டை விட்டு வெளியே துரத்த முயல்கிறார்கள். இது நான் என் சொந்த பணத்தில் கட்டிய வீடு.

வீட்டை விட்டு வெளியே சென்றால் நாங்கள் எங்கு வாழ்வோம்? நாங்கள் இறந்தால் கூட அவர்களுக்கு கவலையில்லை.

இதோடு எங்கள் மீது பொய்யாக பல விடயங்களை மகனும், மருமகளும் திணிக்கின்றனர்.

அப்போது தான் நாங்கள் தற்கொலை செய்வோம் அல்லது மாரடைப்பால் இறந்துவிடுவோம் என அவர்கள் எண்ணுகின்றனர். எங்களை காப்பாற்றுங்கள் என கூறியிருந்தனர்.

இது தொடர்பாக மாவட்ட நீதிபதியிடமும் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்தனர்.

இதையடுத்து உடனடியாக அதிகாரிகள் இந்த விடயத்தில் தலையிட்டு பிரச்சனையை தீர்த்து வைத்துள்ளனர்.

அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்திரஜித் மற்றும் அவர் மனைவியை கொடுமைப்படுத்திய அவர் மகன் மற்றும் மருமகளை 10 நாட்களில் வீட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளோம்.

இது தொடர்பாக அவர் மகன் ஒப்பந்ததிலும் கையெழுத்திட்டுள்ளார் என கூறியுள்ளார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers