வெளிநாட்டிலிருந்து திரும்பிய கணவனை கொலை செய்து புதைத்த மனைவி... விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை

Report Print Santhan in தெற்காசியா

தமிழகத்தில் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டதாக கூறப்பட்ட நபர் கொலை செய்யப்பட்டு அவரது வீட்டிலே புதைக்கப்பட்டிருந்த சம்பவம் 6 ஆண்டுகளுக்கு பின் தெரியவந்துள்ளது.

கடலூர் சிங்காரத்தோப்பைச் சேர்ந்தவர் முருகதாஸ். இவர் சுமிதா என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் வெளிநாட்டு வேலைக்கு சென்றிருந்த முருகதாஸ் கடந்த 2013-ஆம் ஆண்டு விடுமுறைக்காக வீடு திரும்பியிருந்தார்.

ஆனால் அவர் அதன் பின் காணததால், உறவினர்கள் மற்றும் பெற்றோர் பல இடங்களில் தேடியுள்ளனர்.

அப்போது அவரது மனைவி சுமிதா, அவர் மீண்டும் வெளிநாட்டிற்கே சென்றுவிட்டார் என்று கூற, உறவினர்கள் மற்றும் பெற்றோர் அதன் பின் அவரை தேடுவதை விட்டுள்ளனர். சுமிதாவும் அதன் பின் எங்கு இருக்கிறார் என்பது தெரியாமல் இருந்துள்ளது.

இந்நிலையில், வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்த போது, முருகதாசின் பாஸ்போர்ட்டை அவரது தாய் கண்டுள்ளார்.

பாஸ்போர்ட் இல்லாமல், எப்படி வெளிநாட்டிற்கு செல்ல முடியும் என்று சந்தேகத்தின அடிப்படையில் பொலிசாரிடம் அளித்த புகாரில், பொலிசார் அவரது மனைவி இருக்கும் இடத்தை முதலில் தேடினர்.

அப்போது சுமிதாவும், முருகதாசின் தம்பியான சுமேரும் கேரளாவில் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சுமிதாவுக்கும் - சுமேருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததும், அதனை வெளிநாட்டில் இரு‌ந்து திரும்பிய முருகதாசுக்கு தெரியவந்ததால், இது குறித்து கண்டித்துள்ளார்.

இதன் காரணமாக முருகதாஸை அவரது மனைவி சுமிதாவும், தம்பி சுமேரும் இணைந்து கொலை செய்து, வீட்டிலேயே புதைத்துவிட்டு, வெளிநாடு சென்றுவிட்டதாக நாடகமாடியது தெரியவந்துளது.

பிறகு சுமிதாவையும், சுமேரையும் கைது செய்தனர். அதன் பின் முருகதாஸின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து எலும்புக்கூடு தோண்டி எடுக்கப்பட்டது.

கணவனையே கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி, பாஸ்போர்டால் சிக்கியுள்ளது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்