ரூ 200 கோடியில் நடந்த இந்தியர் வீட்டு திருமணம்.. ஏற்படுத்திய பெரும் சர்ச்சை.. காரணம் என்ன?

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவை சேர்ந்த பெரும் கோடீஸ்வர குப்தா குடும்பத்தின் திருமணம் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

குப்தா குடும்பத்தின் நிறுவனங்கள், தென்னாப்பிரிக்காவில் மிக முக்கியமான குழுமங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. அவர்களின் இல்லத் திருமண நிகழ்வு உத்தரகாண்ட் மாநிலத்தின் ஆலியில் கடந்த 18 முதல் 22-ம் திகதி வரை நடைபெற்றது.

அந்தத் திருமண நிகழ்வில் உற்பத்தியான குப்பைகளை அப்புறப்படுத்த முடியாமல் தவித்து வருகிறது அந்த நகராட்சி நிர்வாகம்.

ஜூன் 18 முதல் 20-ம் திகதி வரை அஜய் குப்தாவின் மகன் சூர்யகாந்த் திருமண நிகழ்வும் ஜூன் 20 முதல் 22 வரை அதுல் குப்தாவின் மகன் ஷாஷாங்க்கின் திருமண நிகழ்வும் நடைபெற்றது.

200 கோடி ரூபாய் செலவில் நடைபெற்ற இந்தத் திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்த சமயத்திலேயே, திருமண ஏற்பாடுகள் அந்தப் பகுதியின் சுற்றுச்சூழலைப் பாதிப்பதாகப் பொதுநல வழக்கொன்று போடப்பட்டது.

இந்த திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது, அலங்காரங்களுக்குத் தேவையான மலர்கள் ஸ்விட்சர்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. 200 கோடி செலவில் நடத்தப்பட்ட இரண்டு திருமணங்களும் இறுதியில் 4,000 கிலோ குப்பைகளை விட்டுச் சென்றுள்ளன.

இது அங்குள்ள மக்களுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து குப்பைகளை அப்புறப்படுத்த முடியாமல் நகராட்சி நிர்வாகம் விழி பிதுங்கி நிற்கின்றது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers