மாமா என நம்பி அவருடன் வயல்வெளிக்கு சென்ற 12 வயது அப்பாவி சிறுவன்... அங்கு நடந்த பயங்கரம்

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் 12 வயது சிறுவனின் தலையை தனியாக வெட்டி நரபலி கொடுத்த அவன் சொந்த மாமாவின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் சிண்டாமணி மஜ்ஜி (48). பழங்குடி இனத்தை சேர்ந்த விவசாயியான மஜ்ஜியின் வயலில் சில காலமாக சரியான விளைச்சல் இல்லாமல் இருந்தது.

இதையடுத்து கடவுளுக்கு நரபலி கொடுத்தால் விளைச்சல் அமோகமாக இருக்கும் என அவர் நம்பினார்.

இந்நிலையில் நேற்று தனது மருமகன் உறவான தன்சிங் (12) என்ற சிறுவனையும், அவர் சகோதரர் தபர்சன் (18) என்பவரையும் தனது வயல் வெளிக்கு அழைத்து சென்றார்.

பின்னர் தபர்சனை நிற்கவைத்து விட்டு தன்சிங்கை மட்டும் வயல்வெளிக்குள் அழைத்து சென்ற மஜ்ஜி கோடாரியால் சிறுவனின் தலையை தனியாக வெட்டினார்.

தன்சிங்கின் அலறம் சத்தம் கேட்டதும், வயல்வெளியில் பாம்பை பார்த்து பயந்திருப்பான் என அவன் சகோதரர் தபர்சன் முதலில் நினைத்தார்.

பின்னர் அங்கு சென்று பார்த்த போது தன்சிங்கின் தலை மட்டும் தனியாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து உடனடியாக அவர் பொலிசுக்கு தகவல் கொடுத்த நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சிறுவனின் சடலத்தை கைப்பாற்றினார்கள்.

பின்னர் மஜ்ஜியை கைது செய்தார்கள். மாமா என நம்பி மஜ்ஜியுடன் சென்ற தன்சிங் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் ஊர் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்