அனைத்து பிரச்சனைகள் குறித்தும் பேசி தீர்வு காண்போம்: மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் கடிதம்

Report Print Kabilan in தெற்காசியா

காஷ்மீர் பிரச்சனை உட்பட அனைத்து பிரச்சனைகள் குறித்தும் பேசி தீர்வுக்காண தயாராக இருப்பதாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இடையேயான தனிப்பட்ட சந்திப்பு இல்லை என்று இந்தியா அறிவித்தது.

இந்நிலையில், பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், காஷ்மீர் பிரச்சனை உட்பட அனைத்து பிரச்சனைகள் குறித்தும் பேசி தீர்வுக்காண தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் அவர் கூறுகையில், 2வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும், இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்துவது தான் இரு நாடுகளுக்கும் பலன் அளிக்கும் ஒரே தீர்வு என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers