உலகிலேயே அதிக வெப்பமான நகரம் இதுதான்! வெளியான அதிர்ச்சி தகவல்

Report Print Kabilan in தெற்காசியா

இந்தியாவில் உள்ள ஒரு நகரம் தான், உலகிலேயே அதிகளவில் வெப்பமடைந்த நகரம் எனும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

உலக வெப்பமயமாதலால் இந்தியாவின் பல்வேறு இடங்களில், தண்ணீருக்கு வரலாறு காணாத அளவில் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. காலை வேளையில் பணிக்கு செல்பவர்கள், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் என அனைவரும் வெயிலின் கொடூரமான தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், உலகிலேயே அதிக வெப்பமான நகரம் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது என தெரிய வந்துள்ளது.

சுரு எனும் பகுதியில் கடந்த சில நாட்களாக, 120 ஃபாரன்ஹீட்டையும் தாண்டி வெயில் வாட்டி வதைக்கிறது. அதிகபட்சமாக கடந்த 1ஆம் திகதி 124.5 ஃபாரன்ஹீட் வெப்பம் இங்கு பதிவானது.

வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, இப்பகுதியில் உள்ள மக்கள் பலரும் தங்களது வாழ்க்கை முறையில் மாற்றம் செய்துள்ளனர்.

இங்கு மதிய வேளையில் வெறும் மோர் மட்டுமே குடித்து வருகின்றனர். அத்துடன் தண்ணீர் இன்றி தங்களால் இருக்கவே முடியவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சுரு பகுதியில் 10 கிலோ அளவிலான பனிக்கட்டிகளை வாங்கி, ஏர்கூலர் இயந்திரத்திலும், தண்ணீர் தொட்டிகளிலும் தினமும் போட்டு வைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்