உயிரிழப்பதற்கு முன்னர் அனைத்து சொத்துக்களையும் பக்கத்து வீட்டு நபர் பெயரில் எழுதி வைத்த கணவன்.. கதறிய மனைவி

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் கணவர், தான் இறப்பதற்கு முன்னால் தனது சொத்துக்கள் அனைத்தையும் பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் நபர் பெயரில் எழுதி வைத்தது மனைவியை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மும்பையை சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்து விட்டார்.

இறப்பதற்கு முன்னால் தனது பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் நபர் பெயரில் தனது விவசாய நிலங்கள் மற்றும் வீட்டை எழுதி வைத்துள்ளார்.

இது அவரின் மனைவியை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

பல ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

இது தொடர்பில் நீதிபதிகள் ஷா மற்றும் போபண்ணா கூறுகையில், பக்கத்து வீட்டு நபர் மீது வைத்திருந்த உண்மையான அன்பால் அவர் தனது சொத்துக்களை அவர் பெயரில் எழுதி வைத்துள்ளார், இதை நாம் சந்தேகப்பட முடியாது.

சொத்துக்களை வாங்கி கொண்ட நபர், விதவை பெண்ணை தனது வீட்டில் வைத்து பாதுகாப்பாக கவனித்து கொள்வதாக கூறியுள்ளார்.

ஏனெனில் இந்த வீடு முன்னர் விதவை பெண்ணின் கணவருக்கு சொந்தமாக இருந்தது தான்.

அதே போல விவசாய நிலத்தில் வரும் வருமானத்தில் இருந்து மாதம் ரூ 7500-ஐ விதவை பெண்ணுக்கு அவர் கொடுத்து விட வேண்டும் என உத்தரவிடுகிறோம் என தெரிவித்துள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்