23வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி உலக சாதனை படைத்த வீரர்!

Report Print Kabilan in தெற்காசியா

உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் 23வது முறையாக ஏறி, நேபாள வீரர் கமி ரிதா ஷெர்பா புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

நேபாளத்தின் கும்பு பள்ளத்தாக்கு பகுதியில் ஷெர்பா எனும் பழங்குடியின மக்கள், மலையேற்ற வீரர்களுக்கு வழிகாட்டியாக பணியாற்றி வருகின்றனர். இவர்களில் தாமே கிராமத்தைச் சேர்ந்த கமி ரிதா ஷெர்பா என்பவர், தனது 24வது வயதில் முதல் முறையாக எவரெஸ்ட் சிகரம் ஏறினார்.

அதிலிருந்து எவரெஸ்ட் சிகரம் ஏறி வரும் அவர், அபா ஷெர்பா, புர்பா தாஸி ஷெர்பா ஆகியோரின் சாதனையை (21 முறை), கடந்த 2017 ஆண்டில் எட்டினார். அதன் பின்னர் 2018ஆம் ஆண்டிலேயே அந்த சாதனையை முறியடித்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் 23வது முறையாக எவரெஸ்டில் கால் பதித்து, தனது சாதனையை தானே முறியடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நான் 4ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன்.

என்னுடைய 12 வயது முதல் மலையேற்ற வீரர்களுக்கு சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றினேன். கடந்த 1994ஆம் ஆண்டில் 24வது வயதில் முதல் முறையாக எவரெஸ்ட் மீது ஏறினேன்.

தற்போது என்னுடைய 49 வயதில் 23வது முறையாக எவரெஸ்டில் கால் பதித்துள்ளேன். இன்னும் 2 முறை எவரெஸ்டில் ஏறி சாதனை படைக்க திட்டமிட்டுள்ளேன்’ என தெரிவித்தார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...