அன்று 14 வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்ட சிறுமி... இன்று அவரின் பரிதாப நிலை? கண்ணீர் சம்பவம்

Report Print Santhan in தெற்காசியா

14 வயதில் முதல் திருமணம், அதன் பின் இரண்டாவது திருமணம், பாலியல் வன்கொடுமை என பல சித்ரவதைகளை அனுபவித்த பெண் இறுதியாக உடம்பில் தீ வைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த 2009-ஆம் ஆண்டு தன்னுடைய 14 வயதில், அவரை விட அதிக வயது கொண்ட நபருடன் திருமணம் நடந்துள்ளது.

அதற்காக அந்தப் பெண்ணின் பெற்றோருக்கு 10,000 ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. திருமண வாழ்க்கை, தாம்பத்தியம் இதுகுறித்த எந்தப் புரிதலும் இல்லாத சிறுமி பல்வேறு சித்ரவதைகளை அனுபவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து இரண்டாவதாக திருமணம் நடந்துள்ளது. அப்போது அவர் முதல் திருமணத்தை விட, தன்னுடைய இரண்டாம் திருமணத்திலே மிக மோசமான சூழலை சந்தித்துள்ளார்.

தன்னுடைய இரண்டவது கணவன் ஒரு அரக்கன் அவனும் அவனது நண்பர்களும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தாகவும், சுமார் 20 நபர்களால் பாலியல் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், அந்த பெண் வேதனையுடன் கூறியுள்ளார்.

மேலும் முகத்தில் ஆசிட் வீசி விடுவேன்; குழந்தைகளைக் கொன்று விடுவேன் என மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர்.

குழந்தை இரண்டாவது கணவரிடம் இருப்பதால் இதை அவர் தனக்கு சாதகமாக்கிக்கொண்டு தொடர்ந்து சித்ரவதை செய்துள்ளார்.

மூன்று குழந்தைகளில் முதல் குழந்தை முதலாவது கணவருக்கு பிறந்துள்ளது. இரண்டாவது குழந்தை இரண்டாவது கணவருக்கும் மூன்றாவது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதில் பிறந்துள்ளது.

இதைப் பற்றி எல்லாம் குடும்பத்தினரிடம் கூறிய போதும், எந்த ஒரு பலனும் இல்லை, இதனால் காவல்நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்த போதும், அங்கும் ஒரு பலன் இல்லை, இதனால் விரக்தியடைந்த அவர் தற்போது தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

80 சதவீத தீக்கயாங்களுடன் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை பெற்று வருகிறது.

இந்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் இதுவரை 14 பேரை கைது செய்துள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers