இறந்தவர்களை சிரித்த முகத்துடன் அடக்கம் செய்யும் கிராம மக்கள்... தெரியவந்த ஆச்சரிய காரணம்

Report Print Santhan in தெற்காசியா

தமிழகத்தில் இறந்தவர்களை சிரித்த முகத்துடன் அடக்கம் செய்யும் கிராமத்தைப் பற்றி சில ஆச்சரிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதுக்கோட்டை மாவட்டம் அருகே இருக்கும் சித்தன்னவாசலுக்கு அருகே மெய்வழிச்சாலை என்ற கிராமம் இருக்கிறது.

இந்த கிராமத்தில் ஜாதி, மத பேதம் யாரும் பார்ப்பதில்லை. அண்ணனும், தம்பியுமாக, மாமனும் மச்சானாக, பொண்ணு கொடுத்து, பொண்ணு எடுத்து ஒன்றுகூடி மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்த கிராமத்தின் உள்ளே வெளியூரைச் சேர்ந்தவர்கள் அவ்வளவு எளிதில் நுழைந்துவிட முடியாது.

கிராமத்துப் பெரியவர்கள் கேட்கும் கேள்விகளுக்குச் சரியான பதிலைக் கூறி அதில் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே கிராமத்துக்கு உள்ளே செல்ல முடியும்.

பண்ம் எவ்வளவு இருந்தாலும், அதற்கும் ஆடம்பரத்திற்கும் இவர் இடம் கொடுப்பதில்லை. கிராமம் முழுவதும் எங்கும் நேர்த்தியான கூரைக்குடில்கள். வீடுகளில் மின்சார வெளிச்சம் கிடையாது.

அனைவரும் மெய்வழி மதத்தைக் கடைப்பிடிக்கின்றனர். சிறுவர்கள் தொடங்கி முதியவர்கள் வரையிலும் அனைத்து தரப்பினரும் தலையில் எந்த நேரமும் வெள்ளை டர்பன் அணிந்திருக்கின்றனர்.

இவர்கள் மெய்வழி மதத்தைத் தலைமுறை தலைமுறைகளாகக் கடைப்பிடிக்கின்றன.

மெய்வழி மதத்தைப் பின்பற்றும் எந்தச் சமூகத்தினராக இருந்தாலும் அவர்களை தங்களோடு சேர்த்துக்கொள்கிறார்கள்.

இங்கு பசுமை போர்த்திய மரங்களுக்கு நடுவே பொன்னுரங்க தேவாலயம் இருக்கிறது. இன்றளவும், இங்குள்ள ஆண்டவர் மேல் நம்பிக்கை வைத்து வெளியூரில் இருந்து பலரும் மெய்வழிச்சாலையை நாடி வருவதாகவும் கூறுகின்றனர்.

குறிப்பாக இங்கு ஆண்டுகளுக்கு இணையாக பெண்கள் நடத்தப்படுகின்றனர்.மனிதனாகப் பிறந்தால் எல்லாருக்கும் இறப்புக்குப் பிறகு மறுபிறப்பு இருக்கிறது என்று இவர்கள் தீர்க்கமாக நம்புவதால், இவர்கள் குடும்பத்தில் யார் இறந்தாலும் அழுவதே இல்லை. இடுகாடு வரையிலும் சென்று இறந்தவர்களைச் சிரித்த முகத்துடன் அடக்கம் செய்துவிட்டு வந்துவிடுகின்றனர்.

கணவனை இழந்த பெண்களும் தாலியைக் கழட்டுவதில்லை. பூ பொட்டு வைத்துக்கொள்கின்றனர். கணவன் இறந்த பிறகும் இந்த ஊர் பெண்கள் தீர்க்கசுமங்கலி போன்று வாழ்கின்றனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers